ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக 2022ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது, போராட்டகாரர்களின் கடும் தாக்குதலுக்கு மகிந்த கஹந்தகம இலக்காகியிருந்தார்.
மேலும், அந்த காலப்பகுதியில் சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் மகிந்த கஹந்தகம கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது மகிந்த கஹந்தகம, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீவிர விசுவாசியாக இருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.