கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய பொருளாதார போக்குகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் இன்று (05) இரவு 10.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளி(லி)பரப்பப்படவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.