பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் உணவு, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காசாவில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது.
போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.
23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்நிலையில் காசாவில் சுகாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதேபோல உடனடியாக 14 ஆயிரம் பேர் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐநா கூறியுள்ளது.
அதாவது காசவில் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை பரிசோதித்ததில் அதில் போலீயோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
காசாவின் குடிநீர் தேவையில் 90% பூர்த்தி செய்யப்படவில்லை. எனவே அங்கு மிகமோசமான சுகாதார நிலை நிலவி வருகிறது என ஐநா தெரிவித்திருக்கிறது.