தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும்.
கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்பதாகவும், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் சுமார் 10 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகவும் துருக்கி ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் துருக்கியப் படைகள் காஸாவுக்குள் இறங்கினால், பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இப்போது செய்வதை இனி அவர்களால் செய்ய முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.