கொவிட் -19 காலத்தில் உடல் தகனம் : மன்னிப்பு கோரும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

Date:

கொவிட் -19 காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாய உடல் தகனம் செய்யும் தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்கள் கட்டாயத் தகனம் செய்யப்பட்டன.

இதற்கமைய, 276 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், நடத்தப்பட்ட ஆய்வில் அவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்திடம் அரசாங்கம் மன்னிப்பு கோருவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...