தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் பல தசாப்தகாலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்கின்றேன்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.