வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இணையவழி விசா வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
குறித்த மனுவை பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.
இதனடிப்படையில், இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கு ஒகஸ்ட் இரண்டாம் திகதி நீதிமன்றம் மனுஅனுப்பியுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நிறுவனத்திற்கு இணையவழி விசா வழங்குவதில் நேரடியாக தலையிட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.