சித்திரவதைக்கு ஆளாகியுள்ள பலஸ்தீனியர்கள்: வேடிக்கை பார்க்கும் அரபுலக கைக்கூலிகளும் அமெரிக்காவும் மேற்குலகமும்- லத்தீப் பாரூக்

Date:

தனது கொடூர, மனிதர்களை துன்புறுத்தி மகிழும் தீய பண்புகளை வெளிக்காட்டும் வகையில் இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் இந்த நிலை இன்னமும் தொடருகின்றது.

1948ல் பலஸ்தீன மக்களை அவர்களது தாயக பூமியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டு நாடோடி குடியேற்ற யூதர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை நாடான இஸ்ரேலில் அதன் உருவாக்கம் முதல் இந்நிலை தொடருகின்றது.

2023 அக்டோபர் 7ல் இன்றைய காஸா மோதல் நிலை உருவானது முதல் இது மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அப்பாவி பலஸ்தீன மக்கள் கண்டபடி கைது செய்யப்படுகின்றனர்.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இருந்தம் கூட பலஸ்தீன மக்களை கொன்று குவிக்க அமெரிக்காவும் ஐரோப்பாவும் மிக நவீன நாசகார ஆயுதங்களையும் குண்டுகளையும் அவர்களுக்கு விநியோகித்து வருகின்றன.

2023 அக்டோபர் 5ல் இஸ்ரேல் கடல் வழி, வான்வழி மற்றும் தரை மார்க்கமான தாக்குதல்களை ஆரம்பித்தது முதல் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை அது தடுத்து வைத்துள்ளது. அவர்களில் பெண்களும் அடங்குவர்.சிறுவர்களும் அடங்குவர்.

பலஸ்தீன சுகாதார பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களும் இதில் அடங்குவர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் கதி என்னவாயிற்று என்பதே தெரியாது. காரணம் அது பற்றிய உத்தியோகப்பூர்வ தரவுகள் எதுவுமே இல்லை.

‘இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் காஸாவில் தொடர்ந்து இடம்பெற எப்படி தார்மிகம் அற்ற உலகத் தலைமைகள் அனுமதிக்க முடியும்’ என்ற தலைப்பில் காதா ஆகீ என்ற பத்தி எழுத்தாளர் எழுதி உள்ள கட்டுரையில் இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில் இருந்து தப்பிய பலஸ்தீன மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டு காஸாவுக்கு வெளியே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூக்குதலில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பிய பலருக்கு இந்தக் கடத்தலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது. இரவு நேரங்களில் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

பத்தி எழுத்தாளர் அஹமத் அஸீஸ் லுப்னா மஸர்வா மற்றும் சைமன் ஹபா ஆகியோர் இணைந்து மிட்ல் ஈஸ்ட் ஐ இணையத்தில் எழுதியுள்ள ஒரு ஆக்கத்தில் இரும்புப் பொல்லுகள், மின்சார அதிர்ச்சிகள், நாய்க்கடி, சிகரட் சூடு இவ்வாறு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தடுப்பு நிலையங்களில் சித்திரவதை செய்யப்பட்ட முறைகள் நீண்டு செல்லுகின்றன.

இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீன மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இவ்வாறான விதங்களில் சித்திரவதை செய்யப்பட்டதோடு மட்டுமன்றி கொல்லவும் பட்டனர். மிகவும் வெற்கக் கேடான முறையில் தரக்குறைவான இடங்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மனித உரிமை கண்காணிப்பு மையம் ஒன்றின் தலைவர் றமி அப்து தெரிவித்துள்ள தகவலில் இஸ்ரேலில் இருந்து விடுதலையாகி வந்த பலஸ்தீனர்கள் வழங்கியுள்ள சாட்சியங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலான துஷ்பிரயோகங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

பலவந்தமாக நிர்வாணமாக்கி சோதனையிடல், பாலியல் நெருக்குதல், கற்பழிப்பு அச்சுறத்தல், கடுமையான தாக்குதல்கள். நாய்களை ஏவிவிட்டு தாக்குதல், உணவு, நீர், ஓய்வு வசதிகள் என அத்தியாவசிய வசதிகள் மறுக்கப்பட்டமை என்பன நடந்துள்ளன.

“இத்தகைய கொடுமையான முறைகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பாக பெண்கள மீதும் சிறுவர்கள் மீதும் முதியவர்கள் மீதும், இவை இடம் பெற்றுள்ளமையானது முற்று முழுதாக அடிப்படை மனித உரிமைகள், மனித கௌரவம், சர்வதேச சட்டம் என்பனவற்றை மீறுகின்ற செயலாகும்”

தனது குடும்பத்தோடு அகதி முகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த நிலையில் அங்கிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட ஒருவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தனது கைகள் கட்டப்பட்டு கண்களும் கட்டப்பட்டு இரும்புக கூண்டொன்றுக்குள் 42 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அங்கு நடந்த விசாரணைகளின் போது தன்மீது மின்சாரம் பாய்ச்சப்பட்டதாகவும், இராணுவ நாய்களைக் கொண்டு கடிக்க விடப்பட்டதாகவும், தனது உடம்பை அவை கீரியதாகவும் கூறியுள்ளார். இதேவிதமான கருத்துக்களை விடுதலையாகி வந்த இன்னும் பலரும் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமான ஓசையுடன் இசை ஒலிபரப்பப்பட்டு தங்களது உறக்கம் பறிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. 14 வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை அங்கிருந்தனர் என்று 30 தினங்கள் இஸ்ரேலில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலையாகி வந்துள்ள காமிஸ் மிக்தாத் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் செயல்படும் யுரோ – மெட் மனித உரிமை கண்கானிப்பு மையத்தின் தகவல் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளும் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் திட்டமிட்டபடி படுகொலை செய்யப்படுகின்றனர். சட்டத்தையும் நீதித்துறையையும் முற்றாக ஏமாற்றிவிட்டு அவற்றுக்கு அப்பால் சில இடங்களில் அப்பாவி மக்கள் பலர் காரணங்கள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இஸ்ரேலிய சிறைகளும் தடுப்பு முகாம்களும் மேலும் கொடூரமானவையாக மாறி உள்ளன. குவான்தனாமோ சிறைகளுக்கு ஒத்தவையாக அவை காணப்படுகின்றன. மனித கௌரவம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.

மனித உரிமைகள் மீறப்படுவது அங்கே சர்வ சாதாரணம். மிகவும் மோசமான, பயங்கரமான சித்திரவதை வடிவங்கள் அங்கே அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றன. அவற்றுள் பல கொலைகளில் முடிவடைகின்றன. சர்வதேச கண்டனங்கள் எல்லாவற்றையும் மீறி இவை சர்வ சாதாரணமாக அங்கு இடம்பெறுகின்றன என்று யுரோ – மெட் மனித உரிமை கண்கானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
சுற்றிவளைத்து கைது செய்து ஆடைகள் களையப்பட்டு மந்தைகள் போல் வாகனம் ஒன்றில் குவிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்கள்

மேற்கு கரையின் பலஸ்தீன கிராமமான கல்கியாவில் இஸ்ரேல் படைகள் 14 வயதான மஜித் என்ற பலஸ்தீன சிறுவனை மிக மோசமாகத் தாக்கி கழுத்தை நெறித்துள்ளனர். தங்களது பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இஸ்ரேல் படையினர் அவனை சித்திரவதை செய்துள்ளனர்.

வீதியால் சென்று கொண்டிருந்த அந்த சிறுவனும் அவனது நண்பர்களும் இஸ்ரேல் பாதுகாப்பு வாகனம் ஒன்று தங்களை நெருங்கி வருவதை அவதானித்து அச்சம் கொண்டு ஓடத் தொடங்கி உள்ளனர். அதில் ஒரு வாகனம் அவனை மோதியுள்ளது. அவன் கீழே விழுந்துள்ளான்.

அவனது மற்ற நணபர்கள் அந்த இடத்தில் இருந்து ஓடி தப்பிவிட்டனர். அந்த பாதுகாப்பு வாகனங்களில் இருந்து இறங்கிய இஸ்ரேலிய படைவீரர்கள் பலர் அவனை சுற்றிவளைத்து மோசமாகத் தாக்கி உள்ளனர். சுமார் 30 நிமிடங்கள் இந்த தாக்குதல் தொடர்ந்துள்ளது.

மஜ்தி வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்த போது அவனை கைவிலங்கிட்டு கண்களும் கட்டப்பட்டு ஒரு இராணுவ வாகனத்துக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளான். அந்த இராணுவ வானத்துக்குள் வைத்து இரண்டு படை வீரர்கள் பத்து நிமிடங்களாக அவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை அந்த சிறுவனே விளக்கமாக சாட்சியம் அளித்துள்ளான்.

இடமிருந்து வலமாக சித்திரவதைகளுக்குள்ளான 14வயது மஜீத் 4 வயது இப்றாஹிம் ஹஸ்ஹாஸ் 17 வயது ஒமர் அஹமட் 15 வயதான அமீர்

படைவீரர்களில் ஒருவர் தனது சப்பாத்துக் கால் ஒன்றை எனது வாய்க்குள் திணித்து மற்ற சப்பாத்துக் காலால் எனது நெஞ்சை அழுத்தினார் என்று மஜீத் விவரித்துள்ளான்.

பின்னர் இஸ்ரேல் சோதனை சாவடி ஒன்றில் அந்த வாகனம் நிறுத்தப்பட்டது. அங்கு அவன் வாகனத்தில் இருந்து இறக்கி நிறுத்தப்பட்டு துப்பாக்கி முனையால் தலையிலும் நெஞ்சிலும் தாக்கப்பட்டுள்ளான். தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டுள்ளான்.

என்னை தாக்குவதை நிறுத்துமாறு நான் கத்தினேன். ஆனால் அதை அவர்கள் கேட்கவில்லை. ஒருவர் தனது கைகளை எனது கழுத்தைச் சுற்றி முழுப் பலம் கொண்டு நசுக்கினார். உன்னை கழுத்தை நெறித்து கொள்வேன் என்று அவர் அரபியில் கத்தினார்.

பிறகு நான் மயங்கி விட்டேன். மாலை ஐந்து மணி அளவில் விழித்துப் பார்த்த போது ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தேன். தரையில் போடப்பட்டிருந்தேன். என்னை சுற்றி இராணுவ வீரர்களோடு; பூனை ஒன்றும் நாய் ஒன்றும் நின்றன.

நான் உண்மையிலேயே அச்சமுற்றேன். அதற்கு முக்கிய காரணம் அந்த நாய் எழுப்பிய ஓசை. அந்த பூனை எனது முகத்தை பல தடவை பிராண்டியது. நான் அச்சத்தால் கூச்சலிட்டேன். அப்போது இந்த நாய் உன்னை சாப்பிட விடப்போகிறேன் என்று ஒரு படை வீரர் மீண்டும் அரபியில் கூறினார்.

அதிகாலை இரண்டு மணிவரை மஜீத் மீதான சித்திரவதை தொடர்ந்தது. hல தடவைகள் மஜீத்தின் தலை சுவற்றில் மோத வைக்கப்பட்டது. மீண்டும் அவன் மயக்கமுற்றான். மயங்கிய நிலையில் தண்ணீர் கேட்டபோது அது வழங்கப்படவில்லை. மாறாக அமைதியாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அடுத்த நாள் 12.30 அளவில் மஜ்தி விடுவிக்கப்பட்டான். குடியிருப்பு ஒன்றுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துக்கு அருகில் அவன் விடப்பட்டான். அவனால் அசையவோ நடக்கவோ முடியவில்லை. அப்படியே தரையில் விழுந்து கிடந்தான். பின்னர் அங்கு வந்த பலஸ்தீனர் ஒருவர் தனது வாகனத்தில் அவனை ஏற்றி அருகில் இருந்த கிராமத்துக்குள் கொன்டு சென்றார். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.

நான்கு வயதான இப்றாஹிம் ஹஷாஷ் என்ற சிறுவன் மீதும் இஸ்ரேல் படைகள் நாயை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. இவ்வாரம் மேற்கு கரையின் வட பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

17 வயதான பலஸ்தீன சிறுவன் ஒமர் அஹமட் அப்துல் கானி ஹமீத் தலையில் சுட்டு கொல்லப்பட்டான். 15 வயதான ஹெப்ரோன் பகுதியை சேர்ந்த அமீர் பாண் வாங்க சென்ற போது வழியில் இஸ்ரேலியப் படைகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். மேற்கு கரையின் தெற்கு பகுதியில் அவனது வீட்டுக்கு அருகில் வைத்து இச்சம்பவம் நடந்துள்ளது.

தாக்கப்பட்ட அமீரை நீணடதூரம் வீதி வழியாக இழுத்துச் சென்று ஒரு சுவரோடு சேர்த்து சாத்தியுள்ளனர். பின்னர் அவன் கண்ணத்தில் பல அறைகள் விழுந்துள்ளன. பின்னர் வயிற்றிலும் முகத்திலும் சரமாரியாக குத்துகள் விழுந்துள்ளன. இப்போது அவன் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான். கண் பார்வையையும் இழந்துள்ளான். இது தான் பலஸ்தீன சிறுவர்களின் இன்றைய பரிதாப நிலை.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...