ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பாக வெளியான அறிவிப்பு

Date:

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி நாளை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டால், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயல்பாடு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் அல்லது 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...