ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பாதுகாப்பு!

Date:

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அச்சிடும் அரச அச்சகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாதுகாப்பு நடவடிக்கையானது இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரச அச்சகத்தின் பாதுகாப்பிற்காக தனி பொலிஸ் நிலையமொன்றினை அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில், அச்சகத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று இன்று அரச அச்சகத்திற்கு சென்று பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பல ஆவணங்கள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள (Department of Government Printing)  பிரதானி கங்கானி கல்பனா லியனகே (Gangani Kalpana Liyanage) மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...