ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் சஜித் பிரேமதாச

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சார்பில் இன்று (31) இராஜகிரியிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் குழுவினர் சென்று  பணத்தை வைப்பிலிட்டனர்.

முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி, ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும், 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுயேட்சை பேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, முதல் ஆளாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...