தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (8) விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் பர்ஜானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 14 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதில் பிரதம அதிதியாக தூய தேசத்திற்கான இயக்கத்தின் உயர்நிலை உறுப்பினரான ஸாதிர் அவர்கள், தூய தேசத்திற்கான இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளருமான செப்f ஜவாத் அவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரான அஷ்ஷெய்க் மௌலவி ஏ. எம். அப்துல் மலிக் அவர்களும் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பணப்பரிசினை தூய தேசத்திற்கான இயக்கம்
(Clean Nation ) வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.