தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்!

Date:

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு மற்றும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவித்தல் விநியோகம் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், அனைத்து வீடுகளுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் மாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக  பிரதி தபால் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...