நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளிலும் நாளை(09) கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் தொழிற் சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வரும் நிலையில் இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாளை செவ்வாய்க்கிழமை கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்றாலும், அரச பாடசாலைகள் அனைத்தும் நாளை வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.