களனிவெளி தோட்ட முகாமைத்துவத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்தின் பின்புலத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மூவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகினர்.
மேலும், நகர்த்தல் மனுவினை தாக்கல் செய்தே இம்மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.