மாணவர்களுக்காக, புதிதாக 500 பேருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியிலிருந்து 202 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர் சேவைக்காக அதிகளவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிசு சரிய பேருந்து சேவையின் கீழ் தற்போது 1537 பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.
மேலும் சுமார் 100,000 பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே 1990 சுவா சரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு 95 ஆம்புலன்ஸ்களை இலவசமாக மானியமாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் அனுமதியளித்துள்ளன.