பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன்: வர்த்தமானி வெளியீடு

Date:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்  இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.

அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

பொதுத் தேர்தலில் அவர் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர் வரும் ஓரிரு சில தினங்களில் இலங்கை பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...