பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு

Date:

எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் உணரக்கூடிய விலையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...