அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியசாலைகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே மாணவர்களுக்குரிய காலத்தில் சீருடையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் நன்மையடைவர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.