வத்தளை பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Date:

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை, மாதகொடையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு ஏற்பட்ட தீ பிரதேசவாசிகளின் உதவியுடன் அணைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறை ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 90 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மட்டும் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...