வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி தீ விபத்துகள்: அறிக்கைகள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு கைவிரிப்பு

Date:

வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி திடீர் தீ விபத்துகள் சம்பந்தமான இரசாயன பகுப்பாய்வாளர், மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிகம கல்பொக்கை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி கட்டடத்தில் கடந்த 2024.04.29 மற்றும் அதற்கு முன்னதாக 2024.03.03 ஆம் ஆகிய திகதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள், உடமை சேதம் என்பன பற்றி விசாரணை நடாத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் பூர்வாங்க விசாரணைகளின்படி இரண்டு தீ விபத்துக்கள் சம்பந்தமான அறிக்கைகள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கைகள் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லையென்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2024.04.29ம் திகதியன்று பிரஸ்தாப அரபுக் கல்லூரிக் கட்டடத்துக்கு மேலாக ட்ரோன் கெமராவொன்று ஜேர்மன் பிரஜையொருவரால் பறக்க விடப்பட்ட விடயம் சம்பந்தமாகவும், தீ விபத்து நாசகாரச் செயலா அல்லது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டதா என்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டு நாசகார செயலாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் 29ம் திகதி இந்த அரபுக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்ட தினமே இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெலிகமைக்கு அவசர விஜயம் மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...