குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவர் உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (3) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் தமித் தொட்டவத்தவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்பவர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.