இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரத்திலுள்ள ஈலாட் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க முடியதளவுக்கு போக்குவரத்து இடைஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதனால் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அந்த துறைமுகத்தினுடைய தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.
“ஹூதி செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கியதில் இருந்து எய்லாட் துறைமுகம் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசா மோதல் வெடிப்பதற்கு முன், இந்த துறைமுகம் கார்களுக்கான இஸ்ரேலின் முக்கிய நுழைவுப் புள்ளியாக இருந்தது.
இதேவேளை யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரமான ஈலாட்டை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்ததாகக் கூறுகின்றனர்.
யெமனில் இருந்து ஏவுகணையை அதன் எல்லைக்குள் கடக்கும் முன் அதன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று யெமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இத் தாக்குதல் நடைபெற்றது.
குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.