22ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Date:

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ’06 வருடங்களுக்கு மேல்’ என்ற சொற்தொடருக்கு பதிலாக ’05 வருடங்களுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வர்த்தமானியில் வெளியிடுவதை தவிர்க்குமாறு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் நீதி அமைச்சின் செயலாளருக்கு நேற்று வியாழக்கிழமை பணிப்புரை விடுக்கப்பட்டது

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நீதியமைச்சர் வர்த்தமானி அறிவித்தலை நிறுத்தி வைத்த போதிலும் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...