அதிக தோல்விகள்: மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

Date:

ஒரு காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி கொடிகட்டி பறந்தது. தற்போது சர்வேதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளானாலும் சரி, டி20 ஆனாலும் சரி அல்லது டெஸ்ட் போட்டிகளிலும் கூட அசை க்க முடியாத அணியாக ஒரு காலத்தில் பெயர்பெற்றிருந்தது.

இந்நிலையில், சர்வேதச டி20 போட்டிகளில் அதிகமான தோல்விகளை பதிவு செய்த அணியாக தற்போது இலங்கை அணி மாறியுள்ளது. இதில் சூப்பர் ஓவர் உட்பட அதிக தோல்விகளை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்லேகலையில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகமான தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை மாறியுள்ளது.

அதன்படி, இலங்கை அணி இதுவரையில் இருபதுக்கு 20 போட்டிகளில் 105 முறை தோல்வியடைந்துள்ளதாக கிரிக்கெட் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அணிக்கு அடுத்தபடியாக இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக 104 தோல்விகளுடன் பங்களாதேஷ் அணி உள்ளது.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 101 தோல்விகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 99 தோல்விகளுடன் சிம்பாப்வே அணியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வேதச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் வருமாறு,

இலங்கை – 105 தோல்விகள்
வங்கதேசம் – 104 தோல்விகள்
வெஸ்ட் இண்டீஸ் – 101 தோல்விகள்
ஜிம்பாப்வே – 99 தோல்விகள்
நியூஸிலாந்து – 99 தோல்விகள்

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...