அத்துருகிரிய (Athurugiriya) நகரில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேநேரம் மேலும் மூவர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.