அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அரசு நியமித்த பிரஜைகள் ஆலோசனை குழுவுக்கும் நீதிமன்றம் தடை உத்தரவு

Date:

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (24) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்​கல் செய்துள்ள வேட்பாளர்கள் தமது நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அரச சொத்துக்களை பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு அரச நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

அந்த கடிதத்திற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் பின்னர் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...