ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!

Date:

இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால் பரிந்துரைக்கப்படும் செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் பதினைந்து நாட்களில் வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாகவும், சகல வெளி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லை என ஆசிரியர் – அதிபர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...