‘இதுவரை பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை கண்டதில்லை’: வீடியோ எடுத்த மாணவனுக்கு நேர்ந்த கதி

Date:

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க பயணித்த வாகனத் தொடரணியை வீடியோ எடுத்த குற்றச்சாட்டின் பேரில் 21 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுபிட்டி ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் சந்தேகத்திற்குரிய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,அவரது  கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாணவர் பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிப்பவர் என்றும் அதே வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபருடன் டுபாய் தூதரகத்திற்கு வந்ததாகவும், இதற்கு முன்னர் பொலிஸ் பாதுகாப்பில் பிரமுகர் வாகனம் பயணித்ததை காணவில்லை எனவும், எனவே தான் இந்த வீடியோவை எடுத்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...