இனிமேல் கொரோனாவால் மரணித்தால் அடக்கம் செய்யலாம்: புதிய சட்டம் கொண்டு வருகிறது அரசாங்கம்

Date:

மதச் சடங்குகளுக்கமைய உடல்களின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அரசாங்கத்தினால் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்டவாறு, வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் பூதவுடல்கள் தகனம் செய்தல் கட்டாயமாக்கப்பட்டது.

இத்தீர்மானம் பல்வேறு மதக் குழுக்களையும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும், குறிப்பாக இஸ்லாமியர்களின் மனம் புண்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

அதுதொடர்பாகப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கைகளின் பிரகாரம், கொவிட் வைரஸ் நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல் வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவே மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக ஏதேனுமொரு ஆளுக்கு அல்லது உறவினருக்கு தமது சுயவிருப்பின் பிரகாரம் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது தகனம் செய்வதற்கான தெரிவுக்கு இடமளிக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தேவையாயின் மருத்துவ பீடங்களுக்கு உடலங்களை வழங்குவதற்குமான சட்டத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...