உலகின் முதலாவது சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு சவூதியில்..!

Date:

 -காலித் ரிஸ்வான்

உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சவூதி அரேபியா 24-25 நவம்பர் 2024 அன்று ரியாத் நகரில் முதல் முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது.

2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைன், மொராக்கோ, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை சவூதி அரேபியா முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சவூதி அரேபியா  இத்துறையில் உலகில் முன்னணி வகிக்கக் கூடிய நாடாக இருந்து வருகிறது.

சவூதி அரேபியா, 26 நாடுகளைச் சேரந்த 139 இரட்டையர்களை பரிசீலனைக்குட்படுத்தயுள்ளதோடு  61 ஜோடி இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்தும் உள்ளது.

சவூதி ரோயல் கோர்ட்டின் ஆலோசகராகவும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) மேற்பார்வையாளர் ஜெனரலும்,  புகழ்பெற்ற குழந்தை அறுவை சிகிச்சை நிபுணருமான வைத்தியர் அப்துல்லா அல் ரபீஹ் அவர்களே சவூதி அரேபிய இணைந்த இரட்டையர் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 அன்று ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினத்தை’ அனுஷ்டிக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் தீர்மானமானது சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகளுக்கு கிடைத்தை மிகவும் பெருமைக்குரிய அங்கீகாரமாகும் என அல் ரபீஹ் கருத்து தெரிவித்ததோடு, இந்த குழந்தைகளுக்கு உதவும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவும் இரு புனித மசூதிகளின் பாதுகாவலர், மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் ஆர்வத்தையும் கரிசனையையும் அல் ரபீஹ் மெச்சிப் பாராட்டியுள்ளார்.

உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சவூதி  ரியாத் நகரில் முதல் முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது.

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மற்றும் சவூதி தேசிய காவல்படை சுகாதார விவகார அமைச்சகம் இணைந்து நடத்தும் இம் மாநாட்டில், உலகளாவிய மருத்துவ நிபுணர்கள், மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விடயத்தில் ஆர்வமுள்ள பலர், வெற்றிக் கதைகள் மற்றும் ஒட்டிப் பிறந்த இரட்டையரைப்  பிரிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரைகளைப் பற்றி கலந்துரையாட ஒன்றுகூடவுள்ளனர்.

இந்த மாநாட்டில் ‘இணைந்த இரட்டையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் பிரிவினையின் பன்முக தாக்கத்தை ஆராய்தல்’ என்ற தலைப்பில் ஒரு குழுக் கலந்துரையாடல் அடங்கும், இது பிரிவினை அறுவை சிகிச்சையின் உடலியல், உளவியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராயும் விதத்தலும் அமையும்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...