காசா போரில் தலையிட வாய்ப்பு; பலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்குள் நுழைவோம் :துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

Date:

தமது நாடு காசாவில் இஸ்ரேலின் போரில் தலையிடக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசும்போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

‘நாம் வலுவாக இருந்திருக்க வேண்டும் அப்போது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இந்த மோசமான செயல்களை செய்ய முடியாதிருந்திருக்கும்.

கர்பக்கில் நாம் நுழைந்தது போன்று, லிபியாவில் நாம் நுழைந்தது போன்று அங்கும் நாம் அதனை செய்யக் கூடும்’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2020 இல் ஐ.நா. அங்கீகரித்த அரசுக்கு ஆதரவாக துருக்கி படை லிபியாவுக்கு அனுப்பப்பட்டது மற்றும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கர்பக்கில் துருக்கி இராணுவ பயிற்சிகளை வழங்கியது தொடர்பிலேயே அர்தூகான் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது படையெடுப்பதாகவும், காசாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் சுமார் 10 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகவும் துருக்கி ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் துருக்கியப் படைகள் காஸாவுக்குள் இறங்கினால்,  பலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இப்போது செய்வதை இனி அவர்களால் செய்ய முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...