கொழும்பில் இன்று சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு

Date:

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02) காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (03) பாராளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  மற்றும் உறுப்பினர்கள்  மரியாதை செலுத்தவுள்ளனர். அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...