ஜனாஸா எரிப்பு: மன்னிப்பை விட தண்டனையே கொடுக்கப்படவேண்டும்: அதாவுல்லா கோரிக்கை!

Date:

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் மன்னிப்புக் கொடுப்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

 

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டிருந்தாா்.

 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை  எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.

இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன். எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...