இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள சுமார் 200 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கான மாதாந்த ஊதியங்கள் வழங்குவதை கடந்த 24 மாதங்களாக வக்பு வாரியம் நிறுத்தியமை காரணமாக அவர்கள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் காணப்படும் ஏராளமான வக்பு சொத்துக்களில் இருந்து வருமானம் வரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
BJPயினால் நியமிக்கப்பட்ட உதவி ஆளுநரின் தீர்மானமே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(அல் ஜஸீரா)