தணிக்கை சபை உறுப்பினராக அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் நியமனம்

Date:

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக ‘மாத்ய கீர்த்தி’ அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினராக இருந்து பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவராவார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சு, துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சு முதலான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மள்வானையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஹில்மி மத்திச்சம், அஸ்மா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் மல்வானை அல் முபாரக் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

லண்டன், மலேசியா, இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு முதலான நாடுகளில் ஊடகத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...