சமூக சேவைகளில் ஒத்துழைக்க துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகன் தலைமையில், சமூக சேவைகள் அமைச்சர் மஹினுர் ஓஸ்டெமிர் கோக்தாஸ் (Mahinur Ozdemir Goktas) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷம்மா பின்ட் சுஹைல் பின் ஃபரிஸ் அல் மஸ்ரூயி (Shamma bint Suhail bin Faris Al Mazrouei) ஆகியோர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாட்டு அமைச்சகங்களும், அறிவு அனுபவம் மற்றும் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் வேலைவாய்ப்பிற்கான கொள்கைகளை உருவாக்குவது, ஊனமுற்ற நபர்களை சமூகத்தில் முழுமையாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்பதை உறுதிசெய்து, சுறுசுறுப்பான முதுமையை ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், துருக்கி குடும்பம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சு , சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை ஆகியவை இஸ்தான்புல்லில் உள்ள ஷேக் சயீத் குழந்தைகள் இல்ல வளாகத்தின் புனரமைப்பு, பராமரிப்பு மேம்பாட்டிற்கு ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளன.