பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

Date:

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை அடுத்த சில வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 87,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளத்தினூடாக விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஒகஸ்ட் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான வெட்டுப் புள்ளிகளை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...