மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை

Date:

காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) அதிகாலை, தனது 81ஆவது வயதில் அவர் காலமானதாக உறவினர்கள் அறிவித்தனர்.

இன்று (ஜூலை 26) காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும், நாளைய தினம் (ஜூலை 27)காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் அன்னாரின் பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஏ. எப். ரேமண்ட் மலர்ச்சாலையில் (A. F. Raymond Parlor) வைக்கப்பட்டுள்ளதாக புதிய சம சமாஜ கட்சி அறிவித்துள்ளது.

1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி பதுளையில் பிறந்த விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து எப்போதும் ஒரே கொள்கையுடன் செயற்பட்டு வந்ததோடு, அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து வந்தார்.

சிலோன் பல்கலைக்கழகத்தின் (University of Ceylon) பொறியியல் பட்டதாரியான விக்ரமபாகு கருணாரத்ன, கேம்றிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.

சுமார் 18 வருடங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...