ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

Date:

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத் தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை 14ஆம் திகதி 2024 சாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டித் தொடர் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு மற்றும் பங்குபற்றும் அணிகளின் சீறுடை (jersey) அறிமுக நிகழ்வு மிக விமர்சையாக நேற்றைய தினம் வெல்லம்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி  முனீர் தௌபிக் மற்றும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரைக்கார் கலந்துகொண்டனர்,

மேலும், அதிதிகளாக பாடசாலையின் அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி , பாடசலையின் மாணத்தலைவர்களுக்கான பொறுப்பு ஆசிரியை திருமதி ஓ.எஸ்.எப். ஸாமா, பழைய மாணவர்கள் சங்கக்குழுவின் செயலாளர் இம்தியாஸ் இல்யாஸ், பாடசலை அபிவிருத்தி சங்க குழுவின் செயலாளர் சப்ராஸ் பைஸால், பழைய மாணவர் சங்க குழுவின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் எம்.சீ.எம். அஜ்வத் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுக்காற்று குழு பொறுப்பாளர் ஏ. ஆர். எம். இம்தியாஸ், பழைய மாணவ தலைவர் சங்கத்தின் தலைவர் அஹ்லான் அமானி மற்றும் இப்போட்டி தொடர் ஏற்பாட்டின் தலைவர் கியூ.எம்.எம் ஹிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போட்டித்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள், பாடசாலையின் மாணவத்தலைவர்கள் மற்றும் இப்போட்டி தொடருக்கான அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் வெற்றி கொள்ளும் அணிக்கான கிண்ணம் மற்றும் விளையாட்டு சீறுடைகள் பிரதம அதிதிகளால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மேலும், அனுசரணையாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...