ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு!

Date:

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தரப்பில் முன்னிலையான சட்டத்திரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாக அரசாங்க சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.

அத்துடன் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக குறித்த வழக்கை ஒத்திவைக்குமாறும் அரசாங்க சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...