ஹூதிகளின் பதிலடியால் செயலிழந்த இஸ்ரேலின் ஈலாட் துறைமுகம்

Date:

இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரத்திலுள்ள ஈலாட் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க முடியதளவுக்கு போக்குவரத்து இடைஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதனால் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அந்த துறைமுகத்தினுடைய தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.

“ஹூதி செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கத் தொடங்கியதில் இருந்து எய்லாட் துறைமுகம் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா மோதல் வெடிப்பதற்கு முன், இந்த துறைமுகம் கார்களுக்கான இஸ்ரேலின் முக்கிய நுழைவுப் புள்ளியாக இருந்தது.

இதேவேளை யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரமான ஈலாட்டை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்ததாகக் கூறுகின்றனர்.

யெமனில் இருந்து ஏவுகணையை அதன் எல்லைக்குள் கடக்கும் முன் அதன் வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று யெமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக  இத் தாக்குதல் நடைபெற்ற‌து.

குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...