இந்தியாவை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இலங்கை அணி

Date:

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ( Avishka Fernando) அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ்(Kusal Mendis) 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் றியான் பராக்(Riyan Parag) 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.0 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா( Rohit Sharma ) அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், வோஷிங்டன் சுந்நதர்(Washington Sundar) 30 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே (Dunith Wellalage) 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 27 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணியும் இந்திய அணியும் மாத்திரம் பங்கேற்ற ஒருநாள் தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டே இந்திய அணிக்கு எதிரான இதுபோன்ற தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...