‘இயலும் ஶ்ரீ லங்கா’: ரணிலுக்கு ஆதரவளிக்கும் 34 கட்சிகள் ஒப்பந்தம் கைச்சாத்து

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

‘இயலும் ஶ்ரீ லங்கா’ புரிந்துணர்வு ஒப்பந்தம் என அழைக்கப்படும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திடும் மாநாடு இன்று (16) கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து முற்பகல் 10.06 மணி எனும் சுப நேரத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இம்மாநாட்டில் கையெழுத்திட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கு மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவுமாகுமென, ‘இயலும் ஶ்ரீ லங்கா’ மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

Popular

More like this
Related

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...