வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மூன்று நாள் பயணமாக எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று 07ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை அமைச்சர் அலி சப்ரி எகிப்தில் தங்கியிருப்பார்.
இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின் முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் எகிப்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன் பல முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.
இந்த இருதரப்பு பயணமானது இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.