ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்கும் இலங்கை வீராங்கணை

Date:

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன  பங்கேற்கவுள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள்  இன்று (02) இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் தருஷி ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

குறித்த இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில் தருஷியைத் தவிர மேலும் மூன்று வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த வீராங்கனைகள் பலஸ்தீனம் , குவைத் மற்றும் பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர்களெனவும்  தருஷி கலந்து கொள்ளும் ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய வீராங்கனை தருஷி கருணாரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...