கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை: நாடு முழுவதும் போராட்டம்

Date:

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்கு அறையில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஓகஸ்ட் ஒன்பதாம் ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நள்ளிரவு மூன்று மணியில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்திருந்தனர்.

இந்த நபர் கைது செய்யப்பட்ட இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

பெண் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்ட அறையில் உடைந்து போன புளூடூத் இயர்போன் கிடைத்திருந்த நிலையில் அது குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அத்தோடு, அதிகாலை நான்கு மணிக்கு அந்த நபர் மருத்துவமனை கட்டடத்திற்குள் நுழைவதும் சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன் அப்போது அவர் காதில் இயர்போன் அணிந்திருக்கிறார்.

ஆனால் 40 நிமிடங்கள் கழித்து அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது காதில் இயர்போன் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளானது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஆர்.ஜி கர் மருத்துவமனையின் தலைவராக இருந்த சந்திப் கோஸ் தனது பதவி விலகியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கு நீதி கோரி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...