எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி இறுதி தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான மத்திய செயற்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.