டெலிகிராம் நிறுவனர் கைது: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்துசெய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Date:

உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது, பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து  பாதுகாக்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். பாவெல் துரோவை தற்போது நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, இந்தக் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது இல்லை என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

இந்த கைது நடவடிக்கைக்கு எலான் மஸ்க் உள்ளிட்ட பெரும் புள்ளிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல ரஷ்யாவும், துரோவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, அவரை அவரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

அபுதாபியில் பிரெஞ்சு கடற்படை தளம் இயங்கி வருகிறது. அதேசமயம், பிரான்சிடமிருந்து லெக்லெர்க் டாங்கிகள் மற்றும் ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து   ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயன்படுத்தி வருகிறது. மேலும் சில போர் விமானங்களை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

துரோவ் கைது எதிரொலியால் இந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...