தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான நாள் இன்றுடன் (05) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்காதவர்கள் நள்ளிரவுக்கு முன்னதாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மொத்தம் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அவர்களில், எட்டு பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐந்து பேர் மற்ற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களாவர்.

இதனடிப்படையில், 15 ஆம் திகதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://www.elections.gov.lk இற்குச் சென்று விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுந்து வாக்காளர் நிலையை உறுதிப்படுத்த தேசிய அடையாள எண் மற்றும் பதிவு மாவட்டத்தை உள்ளிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...